ஜனாதிபதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாச கள­மி­றங்­கி­னா­லும் அவர் எமக்­குச் சவாலே இல்லை என மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

ஆளுந்­த­ரப்­பில் பலர் ஜனாதிபதி வேட்­பா­ள­ராக தம்மை காட்­டிக்­கொண்டு வரு­கின்­ற­தாகவும், எனினும் தனக்­குத் தெரிந்­த­வ­கை­யில் ஆறு பேர்­க­ளின் பெயர்­கள் ஜனாதிபதி வேட்­பா­ளாக பேசப்­ப­டு­கின்­றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய, ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்­றும் அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச ஆகி­யோர் பிர­தா­ன­மாக உள்­ள­தாகவும் மகிந்த கூறியுள்ளார்.

எனினும் அவர்கள் மூவ­ரும் தமக்­குச் சவாலே இல்லை இவர்­க­ளில் யார் வந்­தா­லும் தாங்களே வெற்­றி­ய­டை­வோம் என்றும் மகிந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

25 Shares