இலங்கை

சட்டவிரோத வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற இவ்வளவு பேர் கைதா ! 

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த காலப்பகுதியில் 1384 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது கடந்த 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைவானது எனவும் அந்த பணியம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்றமை தொடர்பில் 2449 முறைப்பாடுகள் கிடைத்தாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நிறுவனங்களை தெரிவுச்செய்யும் போது அந்த நிறுவனங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களை கேட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் 2019 ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல்!

மயூனு

இலங்கையில் இஸ்லாமிய தீவரவாதிகளை காட்டிகொடுத்த நாய்க்கு நேர்ந்த பரிதாபம்

venuja

தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இயலாது – பந்துல அதிரடி

venuja

Leave a Comment