சந்திரனில் சீனா தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவும் சீனாவுடன் ,இணைந்து ஆராய்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனையை சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் சமீபத்தில் நாசா மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சீனா, சந்திரனின் இருளான பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ‘சாங்- இ 4’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு செலுத்தியது.

குறித்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதுடன் தற்பொழுது ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னோடியாக 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்திரனுக்கு ரோபோவை அனுப்ப நாசா முடிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 Shares