இலங்கை

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு எதிரான பயணத்தடையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு புதுக்கடை 04ஆம் இலக்க நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்படி முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது வாகன சாரதியான புஷ்பகுமார ஆகியோருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையை விதிக்கும்படி கோரிக்கை முன்வைத்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த இருவருக்கும் எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்தது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இராஜகிரிய பகுதியில் முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் வாகனம் மோதியதில் சந்தீப் என்கிற இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சரே வாகனத்தை செலுத்தியதாக கூறப்பட்டாலும் அதனை அவர் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் பிறந்த தினம் ~ வரலாற்றில் இன்று {07.12.2019}

மயூனு

வடக்கு ஆளுநர் விடயத்தில் ராஜபக்ச அரசு அசமந்தம்~கடுங் கோபத்தில் சம்பந்தன் !

மயூனு

தமிழர் பழமைகள் பறைசாற்றும் கிராம மாணவி வரலாற்று சாதனை !

மயூனு

Leave a Comment