சர்வதேச மொழியான ஆங்கிலத்தை பல பாடசாலையில் முறையாக கற்பிப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் 2ஆம் மொழியாக ஆங்கில மொழியை கற்க வேண்டுமென்ற திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

ஆனால் அந்தப்பாடத்தை முறையாக கற்பிப்பதற்கு தற்போதைய ஆசிரியர்கள் இல்லாமை பெரும் குறைபாடாகும்.

கொழும்பிலுள்ள முக்கிய பாடசாலைகளிலும் இந்த குறைபாடு காணப்படுகின்றது. எனினும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் மூலம் ஆங்கிலத்தைக் கற்க முடியும். அதற்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

9 Shares