சிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர் பாண்டியன் என்ற கோழி பாண்டியன். இவர் மீது அண்ணாமலை காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 

இந்நிலையில் தனது நண்பவர் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டனுடன், அண்ணாமலைநகர் மருத்துவமனை அருகில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், கோழி பாண்டியன் மீது வெடி குண்டை வீசியது. இதில் அவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

இதனால் உணவகத்தில் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடினர். அபோது உள்ளே நுழைந்த அந்த கும்பல் பாண்டியனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
 

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸார் பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஹோட்டலில் வெடிக்காத குண்டை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டு சென்றனர். இந்தக் கொலைசம்பவம் குறித்து விழுபுரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் மற்றும் கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ் ஆகியோர் விசாரணை நடத்தி குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்தசம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

11 Shares