தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் முழு விவரங்களை பார்ப்போம்.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் எஸ் பென் ஏர் கமாண்ட் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரும், கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. மேக்ரோ கேமராவும், கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.7-இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே

– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்

– அட்ரினோ 640 GPU

– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம்

– 128 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0

– டூயல் சிம்

– 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0

– 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

– 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.0

– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.7-இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே

– ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர்

– மாலி G72MP18 GPU

– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம்

– 128 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0

– டூயல் சிம்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7

– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4

– 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ப்ரிஸம் வைட், ப்ரிஸம் பிளாக் மற்றும் ப்ரிஸம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஔரா குளோ, ஔரா பிளாக் மற்றும் ஔரா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2020) காட்சிப்படுத்தப்படும் என தெரிகிறது. இவற்றின் விலை விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.

Related posts

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்

venuja

ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

venuja

இனி மெசஞ்சர் சேவையை அப்படி பயன்படுத்த முடியாதா?

venuja

Leave a Comment