இலங்கை

சிமியோன் வில்சனுக்கு தூக்கு ~அதிரடி தீர்ப்பு வழங்கியது கொழும்பு நீதிமன்றம் !

ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு, புதுக்கடை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சிமியோன் வில்சன் எனும் நபருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் புதுக்கடை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 60.73 கிராம் ஹெரோயின் மற்றும் 12.18 கிராம் கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குற்றவாளிக்கு எதிராக குற்றம் எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

Related posts

கோட்டாவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை ~மகிழ்ச்சியில் மக்கள் !

மயூனு

யாழில் வேலைக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம் – கதறும் உறவுகள்

venuja

Apple 12.9-inch iPad Pro and Microsoft Surface Pro Comparison

admin

Leave a Comment