கேரளாவில் 12 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்த வழக்கில் குறித்த சிறுமியின் காதலன் மற்றும் தம்பதி என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவை சேர்ந்தவர் லிதின்(வயது 19), இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த யூன் மாதம் லிதின், அந்த சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து பலவந்தமாக கற்பழித்துள்ளார்.

இதனை பிபின் மற்றும் வர்ஷா என்ற தம்பதியினர் வீடியோவாக எடுத்துள்ளனர், அந்த வீடியோவை காட்டி மிரட்டி தங்களுடைய காரியங்களை சாதிக்கலாம் எனவும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

மேலும் தாங்கள் சொல்வதை செய்யவில்லை என்றால், குறித்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வௌியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

எனினும் இதற்கு பயப்படாத சிறுமி, இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தெரிவிக்க விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின் கீழ் மூவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

23 Shares