எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமார ரத்நாயக்க முன்னிலையில் இன்றைய தினம் (13) பௌத்த பிக்குவை முன்னிலைப்படுத்திய போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு செல்வதற்கு திருட்டுத்தனமாக இருப்பதாகவும், தனது பிள்ளையை கல்வி கற்பதற்கு ஆசையாக இருந்த போதிலும் உரிய நேரத்திற்கு பாடசாலை செல்வதில்லை எனவும் பெற்றோர்கள் பௌத்த மதகுருவிடம் தெரிவித்த நிலையில் தனது மகனை விகாரைக்கு கொண்டுவந்து விடுமாறும் கல்வி புகட்டுவதில் அக்கறையாக இருப்பதாகவும் பௌத்த மதகுரு பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பௌத்த மதகுருவை நம்பி பெற்றோர்கள் தமது விகாரையில் சிறுவனை கடந்த 08ம் திகதி ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதேவேளை இரண்டு நாட்கள் கழித்ததையடுத்து சிறுவனை விகாரையின் விகாராதிபதி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்கள் உடனே விகாரைக்கு வருகை தந்து சிறுவனை விசாரித்த போது இரவு நேரத்தில் மதகுரு தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் தனக்கு வலி ஏற்படும்போது கண் திறந்ததாகவும் பெற்றோர்களிடம் சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெற்றோர்கள் சிறுவனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று முறைப்பாட்டை வழங்கியதுடன் கோமரங்கடவல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு பௌத்த மதகுருவை கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

ஆஜர்படுத்திய போது மத குருவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல – மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதியான ஆனந்த ஹிமி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

31 Shares