சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் கிழக்கே யான்செங் நகரில் அமைந்த ரசாயன ஆலை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் வேறு சிலரும் லேசான காயமடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த வெடிவிபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

0 Shares