சினிமா

சீரியலை விட நிஜத்திலும் இந்த அளவுக்கு வில்லியா!

கடந்த சில நாட்களாகவே இணையதளம் முழுவதும் ஈஸ்வர் – மகாலட்சுமி பிரச்னை பற்றியே பேச்சு.
தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் தேவதையைக் கண்டேன் சீரியலின் மோதிக்கொள்ளும் ஹீரோவும் வில்லியும் நிஜத்தில் காதலிப்பதுதான் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சீரியலில் முதலில் வேறொருவர் ஹீரோவாக இருந்தார். திடீரென அவர் மாற்றப்பட, அவருக்கு பதில் ஈஸ்வர் ஹீரோவாக நுழைந்தார். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்தார் மகாலட்சுமி. இவருக்குத் திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். இருவருமே சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள். கடந்த வாரம் தன்னையும் தன் மகளையும் கொடுமைப்படுத்துவதாக ஈஸ்வரின் மனைவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியும் சின்னத்திரை நடிகைதான். அவர் பேசும்போது, “மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி விவாகரத்து கேட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தான் சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை அபகரித்து விட்டதாகவும்” ஈஸ்வர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

தேவதையை கண்டேன் சீரியல் நடிகர்கள் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், “மகாலட்சுமி தன் கணவரிடம் இருந்து இன்னும் விவாகரத்து பெறவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் அவரால் பிரச்னைதான்” என்றும் புலம்புகின்றனர். மகாலட்சுமியிடம் நெருக்கமானதும் ஈஸ்வரின் நடவடிக்கைகள் மாறியதாகவும் கூறுகின்றனர். சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான ஈஸ்வர், தன் முயற்சியால் மகாலட்சுமிக்கு கெளரவ செயற்குழு உறுப்பினர் பதவியை பெற்றுத்தந்ததாகவும் கூறப்படுகிறது.

மகாலட்சுமியின் போன் ஒரு வாரமாகவே ஸ்விட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவாரமாக ஷூட்டிங் நடைபெறாத நிலையில், சீரியலில் பணியாற்றும் அனைவரும் பயத்தில் உள்ளனர். தேவதையைக் கண்டேன் சீரியல் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான பதிலும் இதுவரை வரவில்லை. சீரியல் கைவிடப்படுமா அல்ல மாற்று நடிகர்களை வைத்து தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குடும்ப விஷயங்களை வீட்டில் வைத்து பேசி முடித்துக்கொள்ளாமல் இப்படி பலருக்கும் தொந்தரவு அளிக்கும் வகையில் பிரச்னையை விஸ்வரூபம் எடுக்க செய்தது தேவையற்ற ஒன்று என்று விமர்சிக்கின்றனர் சின்னத்திரை பிரபலங்கள்.

Related posts

எனக்கும் கற்றுகொடு என கேட்ட விஜய்.. அட்லீயின் துணை இயக்குனர் நெகிழ்ச்சி பேட்டி

venuja

பட்டும் திருந்தாத யாஷிகா கவர்ச்சி உடையில் புகைப்படம் ~ ரசிகர்களிடம் சிக்கி தவிப்பு!{படங்கள்}

Prince

குளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கொண்ட நடிகை ஸ்ரேயா..!{காணொளி}

admin

Leave a Comment