குத்துச் சண்டை போட்டியில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாணவர் சுனுஜத் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.

சுவீடனில் இடம்பெற்ற குத்துச் சண்டை போட்டியிலேயே அவர் இந்த பதக்கத்தினை வென்றெடுத்தார்.

அத்துடன், கண்டி வித்தியார்த்த கல்லூரி மாணவர் இசுறு ஹங்சஜ மற்றும் திருத்துவ கல்லூரி மாணவர் அடாப் மன்சீல் ஆகியோரும் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச குத்துச் சண்டை அரங்கில் வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாணவர் சுனுஜத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.