விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்கவுள்ள 4 முதல் 5 வீரர்கள் – யார் யார் தெரியுமா?

13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். சீசன் அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.

ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்தில் எடுக்க அந்த அணியின் கைவசம் தற்போது 3.2 கோடி இருக்கிறது. வீரர்களை விடுவிப்பதின் மூலம் அந்த அணி ஏலத்தின் போது 10 கோடி வரை கைவசம் வைத்திருக்க திட்டமிட்டு இருக்கிறது.

வேகப்பந்து வீரர் மொகித் சர்மா விடுவிக்கப்படுகிறார். அவரை 5 கோடிக்கு எடுத்திருந்தது. கடந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.

இதே போல இங்கிலாந்தை சேர்ந்த சாம்பில்லிங்ஸ் (1 கோடி), டேவிட் வில்லி (2 கோடி), நியூசிலாந்தை சேர்ந்த ஸ்காட் குஜ்ஜிலின் (50 லட்சம்) ஆகியோரை விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மும்பை அணியில் பெகரன் டார்ப், பென் கட்டிங், ஹென்டிலிங்ஸ் ஆகியோரும், பெங்களூர் அணியில் கிராண்ட்ஹோம், ஸ்டோனிஸ், ஹெட்மயர், சவுத்தி, கிளாசன் ஆகியோரும் விடுவிக்கப்படுகிறார்கள்.

Related posts

சங்காவின் மனைவியை தவறாக பேசிய இந்திய வீரர் இவரா!

மயூனு

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை வீரர்! 10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் முதல் சதம்

venuja

வருங்காலத்தில் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்

venuja

Leave a Comment