பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் 100வது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு கல்லூரியின் மாணவர்களால் ஏற்பாடு செய்யபட்ட மாபெரும் மென் பந்து கிரிக்கெட் சுற்று போட்டி

பிரதம அதிதியாக இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் சுரங்கலக்மால் பங்கேற்பு

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் 100வது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு கல்லூரியின் 1997,மற்றும் 1998 ஆண்டு காலபகுதியில் கல்லூரியில் கல்வி பயின்ற
க.பொ.சா.தரம் மற்றும் 2000ம் மற்றும் 2001ம்ஆண்டில் உயர் தரத்தில் கல்வி பயின்ற மாணவர்களின் ஏற்பாட்டில் கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி அவர்களின் அனுமதியோடு அணிக்கு 11பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி 03.03.2019.ஞாயிற்று கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்டது

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் சுரங்கலக்மால், ஹட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர்
பி.ஸ்ரீதரன், கோட்டகல்வி பணிப்பாளர் செந்துரவேல், நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டகல்வி பணிப்பாளர் டி.பி.தனபாலன், கல்லூரியின் முன்னால்
அதிபரும் முன்னால் கோட்டகல்வி பணிப்பாளருமான ஏ.ராசையா, மலையக அபிவிருத்தி கல்வி மன்றத்தின் தலைவர் சிவகுமார் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் சுரங்கலக்மால் அவர்களுக்கு கல்லூரியின் பழய மாணவர்களால் அமோக வரவேற்பு அழிக்கபட்டதோடு பொன்னாடை போற்றி கௌரவிக்கபட்டனர் இதே வேளை ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் மற்றும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் சிவகுமார் ஆகியோருக்கு பொன்னாடை போற்றி
கௌரவிக்கபட்டமை குறிப்பிடதக்கது

இதே வேளை இந்த சுற்றுபோட்டி இரவு பகல் போட்டியாக ஏற்பாடு செய்யபட்டுள்ளமை குறிப்பிடதக்கது

269 Shares