சொத்துக்களை திருடிய குற்றத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் றாகம, பகலவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

றாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

றாகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வீடுகளை உடைத்து திருடுதல் மற்றும் கொள்ளையிடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 07 தங்க மாலைகள், 03 பெண்டன்கள் மற்றும் தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மகர பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கைதாகியுள்ளார்.

றாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.