உங்களின் ராசிக்கு ஏற்ப காதலைப் பற்றிய உங்களின் எதிர்பார்ப்புகளும், நீங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமும் மாறுபடும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்தவகையில் ஜோதிடப்படி ஒவ்வொரு ராசியும் தங்களின் காதலை எப்படி வெளிப்படுவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும், அதாவது சண்டை மூலமாக. சண்டை என்றால் அடிப்பது என்று அர்த்தமல்ல, வார்த்தைகள் மூலம் விளையாட்டாக சண்டை போடுவது, சிலசமயம் இது தீவிரமான சண்டையாகவும் மாறும். மேஷ ராசி போரின் கடவுளாவார், எனவே இவர்கள் காதலை கூட போர் போலத்தான் செய்வார்கள்.

இவர்கள் தங்களுக்கு இணையான துணையை தேர்ந்தெடுக்க அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள்.

இவர்களை சிரிக்க வைப்பதுதான் காதலில் விழ வைக்கும் எளிய வழியாகும், இவர்களுக்காக காத்திருப்பது முற்றிலும் மதிப்புமிக்கது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் அனைத்திலும் தங்களின் காதலை வெளிப்படுத்துவார்கள், மெதுவாகவும், முழுமையாகவும் காதலை வெளிப்படுத்த காத்திருப்பார்கள், எனவே காதலிப்பவரிடம் அவ்வளவு எளிதில் காதலை கூறிவிடமாட்டார்கள்.

இவர்கள் காதலிப்பதை தெரிந்து கொள்ள அவர்களின் செயல்களை கவனித்தால் போதும், உங்களை பாராட்டுவது, உங்களிடம் நம்பிக்கை செலுத்துவது, பரிசுகள் கொடுப்பது என இவர்களின் செயல்களே இவர்களுடைய காதலை உணர்த்திவிடும்.

இவர்கள் கொடுக்கும் பரிசுகள் எப்போதும் அவர்களை நியாபகப்படுத்தும் விதத்தில் இருக்கும்.

மிதுனம்

இவர்கள் எப்போதும் வேடிக்கையாக நடந்து கொள்வார்கள், காதலிப்பவரை சிரிக்க வைப்பதுதான் இவர்களின் முக்கிய வேலையாக இருக்கும்.

உங்களின் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவதுடன் அதனை ஒழுங்குபடுத்தவும் செய்வார்கள், உங்களுடன் அதிக நேரம் செலவழிப்பார்கள்.

நீங்களாக வாய்திறந்து கூறும்வரை இவர்கள் உங்களை விட்டு நகர மாட்டார்கள்.

ஆனால் இப்படிப்பட்டவர்களை வேண்டாம் என்று சொல்ல யாருக்குத்தான் மனது வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மேல் நீங்கள் காதலில் விழுந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களின் செயல்களை கவனித்தாலே உங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் காதலை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

தங்களிடம் இருக்கும் திறமைகள் மூலம் உங்களை ஈர்க்க அவர்கள் கடினமாக முயலுவார்கள்.

உங்களுக்காக சமைப்பது, பாடுவது, உங்களுக்கு பிடித்த நிறத்தில் பரிசுகள் கொடுப்பது என உங்களை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.

உங்கள் மீது உங்களை விட அதிக அக்கறை எடுத்துக்கொள்பவர்களை எப்படி பிடிக்காமல் போகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் அவர்களின் கண்கள் அவர்கள் காதலிப்பவர் மேல்தான் இருக்கும்.

இவர்களின் தீவிரமான பார்வையில் இருந்து இவர்கள் காதலிப்பவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.

இவர்களின் வார்த்தை விளையாட்டுகள் ரசிக்கும் படியாக இருக்கும், கடலை போடுவதில் இவர்கள் மன்னர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உங்களை காதலிக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் எளிமையானது, நள்ளிரவில் நீங்கள் அழைத்தாலும் அடுத்த நிமிடம் உங்கள் கண் முன் அவர்கள் நிற்பார்கள்.

கன்னி

இவர்கள் மிகவும் நுணுக்கமானவர்கள். இவர்கள் தங்களின் காதலுக்காக அவர்களின் வேலைகளையும் சேர்த்து செய்வார்கள்.

உங்களைச் சுற்றியே அவர்களை எப்போதும் நீங்கள் பார்க்கலாம், நீங்கிள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி.

உங்களின் தேவைகளை உங்களுக்கு முன்னரே அவர்கள் அறிவார்கள். அக்கறையான காதலை வெளிப்படுத்துவதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை.

துலாம்

அனைவருக்கும் பிடித்த துலாம் ராசிக்காரர்கள் உங்களை விரும்புகிறார்களா என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் மற்றவர்களுடன் அவர்களை சேர்த்துப் பாருங்கள்.

இவர்கள் அனைவரிடமும் மென்மையானவர்களாக நடந்து கொண்டாலும் உங்களுடன் பேசும்போது அது கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதுதான் அவர்களின் இயல்பு. இவர்கள் அனைவரிடமும் நன்றாக பழகுவதைக் கண்டு கோபமோ, பொறாமையோ படக்கூடாது.

இவர்கள் உங்களை காதலிக்கிறார்களா என்பதை புரிந்து கொள்ள நீங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் மற்றவர்களிடம் இவர்கள் பழகுவதற்கும், உங்களிடம் இவர்கள் பழகுவதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கும்.

முக்கியமாக இவர்கள் உங்களுக்கு செல்லப்பெயர் வைப்பார்கள், உங்களின் நிஜ பெயரைக் காட்டிலும் செல்லப்பெயரையே அதிகம் உபயோகிப்பார்கள்.

விருச்சிகம்

புத்திக்கூர்மை வாய்ந்தவர்களால் மட்டுமே இவர்கள் உங்களை காதலிக்கிறார்களா என்பதை கண்டறிய முடியும். இவர்கள் எப்போதும் உங்களை தீவிரமாக கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அதனை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அதனை கண்டறியும் திறன் இருந்தால் மட்டுமே உங்களால் அவர்களின் காதலை உணர முடியும், உங்களின் ஆர்வத்தை உங்களுக்கே தெரியாமல் இவர்கள் தூண்டுவார்கள்.

இவர்களின் கண்கள் உங்கள் மீது இருப்பதை உணரும் தருணம் உங்களுக்கு அளப்பறியா மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்றால் அதனை எளிதில் உங்களுக்கு உணர்த்துவார்கள்.

இவர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது இவர்களின் காதலை நீங்கள் தீவிரமாக உணரலாம்.

அது எந்த விதமான பயணமாக இருந்தாலும் சரி. இவர்கள் காதலை உங்களுக்கு வெளிப்படுத்தி விட்டு அதை நிரூபிக்க இவர்கள் முயலுவார்கள்.

வாழ்க்கைப் பயணத்திலும் இவர்கள் தங்கள் துணைக்கு சிறந்த துணையாக இருப்பார்கள்.

மகரம்

எந்த விதிகளும், ஒழுங்குமுறைகளும் இவர்களை தடுக்காது, எனவே இவர்கள் தங்களை காதலை வெளிப்படுத்தவதில் எந்த விதிகளையும் பின்பற்றமாட்டார்கள்.

இவர்கள் காதலிக்கத் தொடங்கிவிட்டால் இவர்களை ஒருபோதும் அதிலிருந்து திசைதிருப்ப முடியாது, அவருக்கு ஏற்றவர் நீங்கள்தான் என்பதை நிரூபிக்க கடினமாக முயலுவார்கள்.

நீங்கள் அவருக்கு ஏற்றவர் என்று அவர் முடிவு செய்துவிட்டால் உடனடியாக அதனை உங்களிடம் வெளிப்படுத்திவிடுவார்கள். இவர்கள் வெளிப்படுத்தினால் அதனை உடனடியாக ஒப்புக்கொள்ளுங்கள்.

கும்பம்

இவர்கள் தங்களின் காதலை தங்கள் ரசனைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள், தங்கள் துணைக்கு எது பொருத்தமாக இருக்கும், எந்த நிறம் பொருந்தும் என்று இவர்கள் சரியாகக் கூறுவார்கள்.

இதுவே அவர்களை உங்களை ரசிக்க வைக்கும். மற்றவர்களிடம் விலகி இருக்கும் இவர்கள் உங்களுடன் மட்டும் நெருங்கி பழகுவார்கள், அதுவே இவர்களின் காதலை காட்டிக்கொடுத்துவிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பொதுவாக அதிக கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள், அதிலும் தாங்கள் காதலிப்பவர்களிடம் அதிக கூச்சத்துடன் இருப்பார்கள்.

எனவே அவர்களாக தங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது நிச்சயம் நடக்காது.

இவர்கள் உங்களை காதலிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரே வழி உங்களுடன் மட்டும் பேசுவதற்கான வாய்ப்புகளை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.

அவர்களின் காதலை நீங்கள் உணர்ந்து விட்டால் அவரிடம் நீங்களாவே கேட்டு விடுங்கள், உடனடியாக ஒப்புக்கொள்வீர்கள்.

16 Shares