காசல்ரீ நீர் தேக்கத்திற்க்கு நீர் ஏந்திசெல்லும் டிக்கோயா ககிளை ஆறுக்கு அருகாமையில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீடுதிக்கு அருகாமையில் பின்புறத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை அட்டன் குற்றதடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் 10.02.2019 ஞாயிற்று கிழமை இரவு கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

அட்டன் பொலிஸ்வலயத்திற்கு பொருப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டிய அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவும் அவரின்
பணிப்புரைக்கு அமைய அட்டன் குற்ற தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

கைது செய்யபட்டவர்களிடம் இருந்து நீர் இறைக்கும் மோட்டார் குழாய்கள் ஒரு தொகை இல்லம் கொண்ட மண் மற்றும் டொல்பின் வகையினை கொண்ட வேண் ஒன்றினையும் கைபற்றியுள்ளதாக அட்டன் குற்ற தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

டிக்கோயா பகுதியில் அகழபட்ட மாணிக்ககல் இல்லவகைகளை நோர்வூட் பகுதியில் கேசல் கமுவ ஒயாவில் சுத்தம் செய்ய கொண்டு செல்லபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் இருவரும் 11.02.2019.திங்கள் கிழமை அட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதொடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் குற்ற தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது