பண மோசடி வழக்கில் டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு மேலும் 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பிரசார குழுவின் மேலாளராக பணியாற்றியவர் பால் மானபோர்ட் (வயது 69). இவர் உக்ரைனில் பிரசாரகராக செயல்பட்டு, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை மறைத்ததோடு, வங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 47 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் பால் மானபோர்ட் மீது வாஷிங்டன் கோர்ட்டில் நடந்து வந்த மற்றொரு பண மோசடி வழக்கில் அவருக்கு 41 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறை வாசம் அனுபவிக்க வேண்டியதாகி உள்ளது. கோர்ட்டுக்கு வெளியே பேசிய பால் மானபோர்ட், தான் தன்னுடைய அனைத்து தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்க விரும்புவதாக தெரிவித்தார்.

0 Shares