இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை நடிகர்கள் ரஜினி, கமல் திறந்து வைத்தனர். கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் திரையுலகில் அவரின் 60 ஆண்டு கொண்டாட்டமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவரின் தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து இன்று தனது சினிமா குருநாதரான மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை தனது அலுவலகத்தில் நிறுவி உள்ளார். இதனை நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், நாசர், பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, பிரமிட் நடராஜன், சந்தான பாரதி, ரமேஷ் அரவிந்த், கமலின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன், நடிகை பூஜா குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இன்று(நவ.,8) மாலை ‛ஹே ராம்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.

22 Shares