தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் எதிர்கால  தீர்வை நோக்கியே எம்முடன் கைகோர்த்துள்ளனரே தவிர தமது சுயநலத்திற்காக அல்ல என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரித்தார்.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையபட்டுபோட்டி பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் சனிக்கிழமை . இடம் பெற்றது இதில் அதிதியாக கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆட்சிபீடம் ஏறுவதற்கு நூறு வீதம் பிரதான பங்காற்றியவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினரே. இதனால்தால் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே உண்மையில் ஐக்கிய தேசிய  முன்னணியின் சார்பாக கூட்டமைப்பினருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய கவீந்திரன் கோடீஸ்வரன்; பல்வேறுபட்ட பண்முகப்படுத்தப்பட்ட நிதி இருக்கின்றது.இந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கார்மேல் பற்றிமா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிக்கு இரண்டு மில்லியன் நிதியினை ஒதுக்கி  எனது பணியினை இலகுபடுத்தியுள்ளார்.

கடந்த இரு மாதங்களின் முன்பு எங்களுடைய பிரதமர் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக சட்டத்தோடு போராடி ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார். இதற்கு பக்கபலமாய் நின்றுதவிய சிறுபான்மை மக்களது தீர்வுகளுக்கு தமது பங்களிப்பினை தருவார் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற எமது நாட்டிலுள்ள மக்களும் புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும் பொறுமையாக இருக்க வேண்டும். சிலரது விமர்சனங்கள் எங்களை பாதிப்பதோடு மட்டுமல்லாது  தெற்கிலும்  பாதிப்பினை ஏற்படுத்தும்.

நான் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு எனது கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாக்குபலமே முக்கியபங்கு . இதுவே  எங்களது மக்களை கௌரவப்படுத்தி என்னை கல்வி இராஜாங்க அமைச்சராக எங்களது பிரதமர் நியமிக்க காரணியாகும். எனக்கு கிடைத்துள்ள இந்த கல்வி இராஜாங்க அமைச்சு பதவியானது வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.

நான் அம்பாறை மாவட்டத்திற்கு முதல்தடவையாக வருகைதந்துள்ளேன் . அதுவும் கல்வி இராஜாங்க அமைச்சராக பவியேற்ற பின்பு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு முதல்முறையாக வருகை தரக் கிடைத்த வாய்ப்பை பெருமையாக நினைக்கிறேன்.

யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாத்திரமே பாதிப்புற்றது  அதேபோல யுத்தத்தினால் போராடிவந்த இரு மாகாணங்களும் இன்று மக்களின் தேவைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதேபோல் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்காக இயற்கையோடு போராடவேண்டியுள்ளது 

கல்லூரியின் பிரதான குறைபாடான தொழிழ்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கல்வி அமைச்சர்; கவனத்திற்கு கொண்டுவருவதுடன் அடுத்த மாதம் ஒதுக்கப்படும் வரவு செலவு திட்ட நிதியில் அபிவிருத்திக்கு நிதியினை ஒதுக்கி தருவதாக  தெரிவித்தார்.

0 Shares