வவுனியா அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி நேற்றயதினம் (14) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைத்தபின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மின்சக்தி அமைச்சர்.
இங்கு அமைக்கபட்டுள்ள அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்கலத் தொகுதியானது எமது நாட்டின் மின்சாரத் தேவைக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, வின்போஸ் நிறுவனத்தால் அமைக்கப்ட்டுள்ள இந்த சுரிய மின்கலத் தொகுதியானது மின்சாரத்தை சேமித்து இரவில் பற்றரியில் இயங்கக் கூடியது, வன்னி பிராந்தியத்தில் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாகவே இதனை கட்டமைத்துள்ளோம், நாட்டின் அபிவிருத்தியை நோக்கியே செல்வதற்கு பாராளுமன்றத்தையும் கட்டமைத்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக்கட்சி ஒப்பந்தமிட்டு செயற்படுகிறது என்பது முற்று முழுதான பொய் எமது நாட்டை பொறுத்தவரையில் சிங்கள,தமிழ் முஸ்லிம் என்ற பேதமில்லாமல் ஒற்றுமையுடன் வழுவதற்கான வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது.

 தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பந்தமிட்டு அரசு செயற்படுகிறது என தெரிவிப்பவர்கள் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள், கடந்த நான்கு வருடங்களாக எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் ஐ.தே.கட்சி நாட்டை வழிநடத்தியுள்ளது  தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் செய்திருக்கவில்லை, எங்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை தயவு செய்து நாட்டை அபிவிருத்திபாதையில் இட்டு செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

வவுனியா பிரதேசத்தில் இவ்வாறான அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும் என யார் நினைத்திருப்பார்கள்? ஆகவே இலங்கை நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்ல அனைவரும் உதவி செய்ய வேண்டும், தேர்தலை பொறுத்தவரையில் அதை எதிர்கொள்வதற்கு எங்கள் கட்சியும் அரசாங்கமும் தயாராகவே இருக்கிறது என தெரிவித்தார்.

0 Shares