இந்தியாவில் சேலம் அருகே உள்ள கிராம பகுதியில் நிலவு மண் கிடைத்துள்ளது இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தாம்பூண்டி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆராய்ச்சியின் முடிவாக, நிலவில் உள்ள அதே கனிம வளம் கொண்ட நிலவு மண் தற்பொழுது பூமியில் அதுவும் தமிழ் நாட்டிலேயே கண்டறியப்பட்டுள்ளது. 

மிக அரிதான இந்த மண் அமெரிக்காவிலிருந்து கிலோ 150 டாலருக்கு விற்பனைக்குக் கிடைக்கப்பெறுகிறது. 

சந்திரயான் 2 விண்கலத்துடன் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள ரோவர் வாகனத்தை நிலவில் தரை இறங்கி நிலவின் மேற்பரப்பை ஆராய துவங்குவதற்கு முன், பூமியில் ரோவர் வாகனத்தைச் சோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். 

இதற்கு சுமார் 60 முதல் 70 டன் நிலவு மண் தேவைப்பட்டது. விலை உயர்ந்த இந்த மண், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தால், நிச்சயமாகப் பெரிய அளவில் நிதி செலவிட வேண்டும். 

ஆனால் சேலத்தில் உள்ள சித்தாம்பூண்டி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் நிலவு மண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பசால்ட் என்ற எரிமலை பறை மற்றும் அனார்த்தசைட் என்ற பாறை வகைகள் தான் நிலவின் மேற்பரப்பில் பெரிதும் காணப்படுகின்றன. 

அனார்த்தசைட் என்று அழைக்கப்படும் இந்த அறிய வகை பாறைகள், சித்தாம்பூண்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 400 முதல் 500 அடி வரை பூமியில் துளையிட்டு இந்த அறிய வகை நிலவு மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நிலவு மண், பூமியில் உள்ள மண்ணை விட முற்றிலும் வேறுபாடுடையது, குறைந்த புவி ஈர்ப்பு விசை, நிலவின் தட்பவெப்ப நிலையுடன் கூடியது. 

சேலத்தில் கண்டறியப்பட்ட நிலவு மண் நிலவின் பூவிஈர்ப்பு விசை மற்றும் தட்பவெப்பநிலையுடன் கச்சிதமாக ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் நிலவு மண் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் நாட்டிலேயே நிலவு மண் கிடைத்துள்ளது பெருமைக்குரியதே.

21 Shares