தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வீதிவிபத்துக்களில் பெருபாலானவை மோட்டார் சைக்கிள்களினாளே ஏற்படுகின்றன. இதன் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இவ்வாறான தலைகவசங்கள் காரணமாகும். 

கம்பா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுகாக நடத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.