அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட 5 குழந்தைகளும் 8 மாதம் முதல் 7 வயது வரையானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தின் எரி நகரத்திலேயே இந்த நடுங்க வைக்கும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 1.15 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இருந்து 12 வயது மற்றும் 17 வயது என இரு சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக எகிரி குதித்து உயிர் தப்பியுள்ளனர்.

தப்பிய இரு சிறுவர்களும் உசுப்பிய பின்னரே அப்பகுதி மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் தளத்திற்கு செல்ல நபர் ஒருவர் முயன்றதாகவும், ஆனால் கரும் புகை காரணமாக உள்ளே செல்லாமல் அவர் திரும்பியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த மாகாண தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் பெரும்பாலான பிள்ளைகளை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த காப்பகத்தில் இருந்து பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த காப்பகத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தனர், தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

16 Shares