பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில், இந்தியில் அமிதாப் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார்.

தீரன் அதிகாரன் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்தமாதம் 8ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், தீ முகம் தான் என்ற தீம் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பில்லா, மங்காத்தாவை போல் இந்த தீம் மியூசிக்கும் ரசிகர்கள் இடையே கொண்டாடப்பட்டு வருகிறது.

9 Shares