இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபரிக்க அணி 71 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தல‍ைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுக்களினாலும், செஞ்சூரியனில் 06 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 113 ஓட்டத்தினாலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந் நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று டர்பனில் பகலரவு ஆட்டமாக நேற்று ஆரம்பானது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுதாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்றது.

இதனால் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 332 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 332 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாட முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 35 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

அதன்டிப திக்வெல்ல 2 ஓட்டத்துடனும், அவிஸ்க பெர்னாண்டோ 23 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்காக குசல் மெண்டீஸ் மற்றும் ஓசத பெர்னாண்டோ ஜேடி சேர்ந்தாடி 16 ஓவர்களுக்கு 75 ஓட்டங்கள‍ை பெற்றவேளை மழை குறுக்கிட்டது.

இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 24 ஓவர்களுக்கு 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

193 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி மீண்டும் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி வழங்கப்பட்ட 24 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்கள‍மைாத்திரம் பெற்று, 71 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளையும் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி நாளைமறுதினம் போர்ட்எலிசபெத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Shares