நடிகை இலியானாவை டிஸ்கஷனிற்காக ஹோட்டலிற்கு அழைத்த பிரபல இயக்குனர் ஒருவர், டிஸ்கஷன் முடிந்ததும், படவாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டார் என்று அடுத்த குண்டை போட்டுள்ளார் கவர்ச்சிப்புயல் ஸ்ரீரெட்டி.

அவரது பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாகத் தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையைக் களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

தற்போது ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, வளசரவாக்கத்தில் குடியேறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் வன்கொடுமை குறித்து தகவல் வெளியிடுவதுடன், கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை இலியானா குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘இலியானாவை டிஸ்கஷனுக்காக தாஜ் பந்த்ரா ஹோட்டலுக்கு இயக்குநர் தேஜா அழைத்தார். அவரது டாஸ்க்கை முடித்துவிட்டு, இலியானா கேமராவுக்கு செட் ஆகவில்லை என்று கூறி தவிர்த்து விட்டார்.

அதன்பிறகு தான் இலியானா பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இது இன்னும் முடியவில்லை பார்ட் 2 விரைவில் வரும்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவால் தெலுங்கு சினிமா மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. முன்னதாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீரெட்டி, தெலுங்கு திரைத்துறையில் 90 சதவீத நடிகைகள் இயக்குநருடன் நிர்வாணமாக வீடியோ கோலில் பேசுகிறார்கள் என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

1 Shares