வெள்ளவத்தையில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டனர்.

அந்தப் பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்கு முன்னால் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டது.

கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பெரும் மோதலாக மாறியிருந்தது.

இதன்காரணமாக பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் வெளியானமையினால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அதிரடி படையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

62 Shares