இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட்டமைக்கு  இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கடந்தகாலத்தில் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பதிவுசெய்யப்படக்கூடியதென சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.

அவர் அன்று எல்ரீரீஈ கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மானைப் பிரித்து எல்ரீரீஈ இயக்கத்தை இரண்டு துண்டங்களாக ஆக்கியதையடுத்தே போர் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறைக்க முடியாது. இதுவே உண்மையான வரலாறு  என்றும் அவர் கூறினார்.ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அமைச்சர் ராஜித மேலும் பேசுகையில்– அலி ஸாஹிர் மௌலானா அன்று எல்ரீரீஈ யினரை இரண்டாகப் பிளவுபடுத்தாவிட்டால் இன்றும் எம்மால் எல்ரீரீஈ யை தோற்கடிக்க முடியாது. இதனால் எவர் எதைச்சொன்னாலும் எவர் இதை மறந்தாலும் இலங்கையின் வரலாற்றில் இந்த நாடு பிரிக்க முடியாத நாடு என்றும் பேசப்படும் வேளைகளில் எல்லாம் அலி ஸாஹிர் மௌலானாவின் தியாகம் நினைவுகூரப்படவேண்டியதே.

இன்று நான் எனது சொந்த அமைச்சருக்கான பாதுகாப்பில் மாத்திரமே இங்கு விஜயம் செய்திருக்கிறேன். மேலதிக பாதுகாப்பு எதுவும் கிடையாது. இல்லாவிட்டால் என்னால் இன்று இவ்வாறு சொற்ப பாதுகாப்புடன் வரமுடியாது. எனவே இந்த நிலை ஏறாவூருக்கு மாத்திரமல்ல முழுநாட்டிற்கும் பொருந்துமானதூகும்.
அலி ஸாஹிர் மௌலானா இந்த விடத்தைச் செய்யும் போது என்னோடு பேசினார்.

அப்பொது நான் சொன்னேன் ‘ இது நல்ல பெறுமதியான வேலைதான் ஆனால் அதன்பிறகு நீங்கள் உயிரோடு வாழ முடியாது என்றேன்.அதன்பிறகு எனது வருகிறேன் என்றார். வேண்டாம் இந்தப்பக்கத்திற்கும் வரவேண்டாம் என்றேன்.
பின்னர் அவர் அதைனத்தையும் செய்துவிட்டு நாடுகடந்து அமெரிக்காவுக்கு  சென்றார். அங்கு நாங்கள் அவரைச் சந்தித்தோம். அதன் பிறகு அவர் எனது குடும்ப நண்பராகினார்.
எனினும் அவர் மீண்டும் நாட்டிற்கு வந்து உள்ளுராட்சி மன்றத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பித்து இன்று இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமர் அவருக்கு சலுகைகளைச் செய்வார் என்றார்.