இலங்கை

நினைவேந்தல் நிகழ்வுகளில் அமைதியான முறையில் கலந்துகொள்ளுங்கள்~விக்கி வேண்டுகோள் !

நினைவேந்தல் நிகழ்வுகளில் அமைதியான முறையில் கலந்துகொள்ளுங்கள்
மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வென்றெடுப்பதற்குமாக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை
வீரர்களை நினனவுகூர்ந்து நினைவு நாள் அனுஷ்டிப்பது வரலாற்று காலம் தொட்டு உலகம் பூராகவும்
மனித நாகரிகத்தின் முக்கிய பண்பாக காணப்படுகின்றது.

விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் சார்ந்த ஒரு ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் வருடா வருடம்
நினைவு நாளை அனுஷ்டிப்பது அந்த விடுதலை வீரர்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூருவதற்கு
மட்டுமன்றி அவர்களின் உறவினர்களின் உள்ளக் குமுறல்கள் மற்றும் வேதனைகளுக்கான ஒரு ஆறுதலை
அளிப்பதற்கும் வழிவகுக்கிறது.

ஆனால் யுத்தம் நடைபெற்றபோது தமது உயிர்களை நீர்த்த விடுதலை வீரர்களை கார்த்திகை மாதத்தில்
நினைவு கூருவதற்கு கடந்த காலங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பல்வேறு தடைகளும் இடைஞ்சல்களும்
நாகரிகமற்ற முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் சட்டம் ஒழுங்கு
மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் மிகவும் அமைதியான முறையில்
உணர்வுபூர்வமாக கார்த்திகை மாத நினைவுகூரலை எமது மக்கள் செய்துவருகிறார்கள்.

நாளை 27 ஆம் திகதி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நாள் நிகழ்வுகள் அமைதியான
முறையில் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன். அமைதியான
வழியில் உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில்
கலந்துகொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். நாட்டில் நிலையான சமாதானத்தையும்
இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாடுபடப்போவதாக கூறியிருக்கும் புதிய
அரசாங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு ஆவன செய்யும்
என்று எதிர்பார்க்கிறேன்.

எமது மக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது
இன்னுயிர்களை ரூடவ்கம் செய்த எமது விடுதலை வீரர்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே
வாழ்ந்துகொண்டிருப்பர்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி
26.11.2019

Related posts

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் மற்றுமொரு முக்கியஸ்தர் உள்ளடக்கம்

venuja

வானவர்கள் மாரி சொரிய உறவுகளின் கண்ணீரில் கரைந்தது கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்!{படங்கள்}

மயூனு

இந்திய இயக்குநர் மீது தாக்குதலா~ மறுக்கிறது இலங்கை இராணுவம்!

மயூனு

Leave a Comment