நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்தை குற்றவாளி நேரலையில் ஒளிபரப்பினான்.

நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் முதல் கட்டமாக 6 பேர் பலியானதாக தகவல் வந்தது. தற்போது பலியானவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. 2-வது துப்பாக்கி சூடு லின்வுட் புறநகர் பகுதி மசூதியில் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த துப்பாக்கிசூட்டை அடுத்து பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்ற நேரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் உட்பட மற்ற வீரர்களும் அந்த மசூதியில் இருந்ததாகவும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தும் தீவிரவாதி தனது உடலில் உள்ள கேமரா மூலம் தாக்குதலை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பும் செய்து வருகின்றான். இப்படி தாக்குதல் நடத்தி அதனை நேரலையில் ஒளிபரப்பியது உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போல் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கண்டறிந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

துப்பாக்கி சூடு குற்றவாளி “ப்ரெண்டான் டாரன்ட்” என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான். 73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன் தெரிவித்து உள்ளான்.

103 Shares