கடலூர் மாவட்டம் விருத்தாலசத்தில் ஒரு திருடன் நிர்வானமாக சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

விருத்தாச்சலம் பகுதியில் ஜமால் பாஷா என்ற வீதியில் ரம்ஜான் அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நிர்வாணமாக திருட  வந்துள்ளார் ஒரு மர்ம நபர். அவரைப் பார்த்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எழுப்பிய கூச்சலால் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அதில் அந்த நிர்வாண திருடனின் உருவம் பாதிவாகி இருந்தது.  தற்போது அந்த திருடனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார்  ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

20 Shares