இலங்கை பிரதான செய்திகள்

நிஷாந்த டிசில்வா தப்பியோடியதற்கு இதுதான் காரணம் – அமைச்சர் விமல் வீரவங்ச வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு எதிரான தூண்டுதல்கள் மற்றும் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா பிரதான காரணமானவர் என சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே நிஷாந்த டி சில்வா நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சில் இன்று உத்தியோகபூர்வமாக கடமையேற்றுக் கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் முழுமையாக பாடுபடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கரை வருடங்களைப் போன்றல்லாது புதிய பாதையில் செல்ல அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் விமல் கூறியுள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வாக்குறுதியளித்திருக்கின்ற நிலையில், அந்த பொறுப்பையும் தாம் நிறைவேற்றுவோம் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related posts

வெள்ளத்தில் மூழ்கிய செல்லக் கதிர்காமம்.!{படங்கள்}

மயூனு

அதிகாரபரவலாக்களா ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது கோட்டா உறுதி !

மயூனு

கோட்டாவுக்கு ரிசாத் எழுதிய கடிதம் !

மயூனு

Leave a Comment