இலங்கை

நோட்டன் பிரிஜ் வீடொன்றில் வெடிபொருட்க்கள்  மீட்பு !

நோட்டன் பிரிஜ் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கினிகத்ஹேன தியகல ஊடான மஸ்கெலிய பிரதான வீதியின் புணரமைப்பு நடவடிக்கைகளில் சேவை செய்யும் நபர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் ஒரு அறையில் இருந்து குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் இருந்து 21 டெட்டனேட்டர்கள், சொவானுல் மீட்டர் 70, வெடிபொருட்கள் 70 கிராம், அமோனிம் 2 கிலோ 100 மற்றும் கிரேனைட் குச்சிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்தவர்கள் அவ்விட்டை விட்டு சென்றதன் பின்னர் வீட்டை சுத்தம் செய்ய சென்ற உரிமையாளரினால் குறித்த வெடிபொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி அலுவலகம் அதிரடி! 6 பேர் கொண்ட குழு நியமனம்!

மயூனு

கொட்டும் மழையிலும்~ கடமை தமிழர் பகுதியில் மெய்சிலிர்க்க வைத்த பொலிஸ் அதிகாரி !

மயூனு

யாழில் புலிகளின் ஆயுத கிடங்கு விவகாரம் ~மண்ணை கிண்டி போட்டதுதான் மிச்சம் !

மயூனு

Leave a Comment