இலங்கை பிரதான செய்திகள்

பயணிகள் பேரூந்துகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் அமுலாகும் புதிய தடை…!! தடுமாற்றத்தில் சாரதிகள்..!

பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களில் ஒலி எழுப்புதலை குறைப்பதன் மூலம் ஒலி மாசுபாட்டின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து, ஒலி எழுப்புதலை கட்டுப்படுத்தும் நோக்குடன் குறித்து பேருந்து சாரதிகள் மற்றும் இதர வாகனங்களின் சாரதிகளை அறிவுறுத்தும்படி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.ஒரு வாரம் சாரதிகள் அறிவுறுத்தப்படுவர். அதை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்களிற்குள் ஒலி எழுப்பும் சாதனங்கள் வாகனத்திலிருந்து அகற்ற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.அதிக பணச் செலவில் விதம் விதமான ஒலி எழுப்பும் சாதனங்களை பொருத்தி வைத்திருந்த சாரதிகள் இவ் அறிவித்தல் வெளியானதை அடுத்து, செய்வதறியாது தடுமாறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

19ஆவது திருத்தம் விரைவில் இரத்து!கோட்டா தெரிவிப்பு

venuja

அந்த மாதிரி பட இறுவெட்டுகளுடன் அட்டனில் ஒருவர் கைது !{படங்கள் }

மயூனு

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி சம்பவம் ~மகிந்தவின் அதிரடி அறிவிப்பு !

மயூனு

Leave a Comment