பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.இச் சம்பவம் இன்று பிற்பகல்  03மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கு உள்ளாகியவரை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிற்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனாலும் அவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் பலியானவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாராகிய 2ம் குறுக்குத் தெரு பருத்தித்துறையைச் சேர்ந்த  ம.புவிகரன் வயது 38. இவரது உடல் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.