‘‘ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அந்த படம் தாங்கி நிற்கும் கதைதான் தீர்மானிக்கும்.

சமத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில், ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனியின் நடிப்பில் ‘பற’ படம் உருவாகி இருக்கிறது’’ என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் கீரா. இவர் மேலும் கூறுகிறார்:-

‘‘பற படத்தில், காதலர்களின் பாதுகாவலராக சமுத்திரக்கனி நடித்து இருக்கிறார். சாந்தினி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். வாழும்போது வன்மமும், துரோகமும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற கருத்தை படம் வலியுறுத்துகிறது. அதோடு ஏற்றத்தாழ்வு, ஜாதி ஒழிப்பு, மற்றும் ஆணவ கொலைக்கான தீர்வு ஆகியவற்றை சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மூலம் சொல்லி யிருக்கிறோம்.

எஸ்.பி.முகிலன் இணை தயாரிப்பில், பெவின்ஸ் பால், ராமச்சந்திரன், ரிசி கணேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர். சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஜார்ஜ் வி.ஜாய் இசையமைத்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரும்’’ என்கிறார், டைரக்டர் கீரா.

0 Shares