பழங்கால நகரங்களில் முக்கியமானது எது தெரியுமா?

0
16

ஆரம்ப காலத்தில் வணிக சந்தையில் மிக முக்கியமான இடம் வகித்தவை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மிக முக்கியமான இடங்களாக விளங்கியவை எல்லாம் தற்போது அழிந்து விட்ட நகரமாகவும் அல்லது அழியும் நிலையில் இருப்பவையாகவும் இருக்கிறது.

வரலாறு எவ்வளவு முக்கியமானது என்பதை நம்மில் பலரும் உணராமல் இருக்கிறோம். இன்றைக்கு நாம் வாழ்கிற வாழ்க்கைக்கான அடித்தளத்தை அவர்கள் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்றது தான், அதனை நாம் கட்டிக் காப்பாற்ற வேண்டியது நம்முடைய சமூக பொறுப்புகளில் ஒன்றாகும்.

பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் அடுத்து வழி வழியாக வருகிற சந்ததியினருக்கு நாம் அதனை எடுத்துச் செல்ல வேண்டும். ஆரம்ப காலத்தில் இந்த உலகின் முக்கிய நகரங்களாக என்னென்ன இருந்திருக்கிறது. அவற்றில் எத்தனை நகரங்கள் அழிந்து விட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நியர் ஈஸ்ட் : நியர் ஈஸ்ட் என்று சொல்லப்படுவது தனி நாடு கிடையாது. மாறாக மத்திய கிழக்கிலிருந்து எகிப்து போற வழியை இப்படி குறிப்பிடுகிறார்கள். அங்கே தான் இராக்,துருக்கி,ஈரான்,சிரியாவின் வடகிழக்குப் பகுதி மற்றும் குவைத் ஆகியவை இருக்கிறது. இந்த பகுதி கிமு 4 ஆம் நூற்றாண்டில் துவங்கியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

அஸ்ஸிரியா : அஸ்ஸிரியன் அரசாட்சி இருந்த இடம் இப்படி அழைக்கப்படுகிறது. மெசபொட்டமியாவின் வடக்குப் பகுதியில் இந்த அரசாட்சி இருந்தது. டிகிரிஸ் மற்றும் யுப்ரேட்ஸ் ஆகிய நதிகள் இங்கே ஒடியது. இங்கே அரசராக இருந்தவர் ஷம்ஷி அடாத். இவரை வீழ்த்தி அரியனை ஏறியவர் பாபிலோனாவைச் சேர்ந்த மன்னர் ஹம்முருபாய். பாபிலோனா : இவர்களுக்கு கடவுளின் அருள் நிரம்ப கிடைத்திருக்கும் என்று எண்ணப்படுகிறது. மனிதர்களை கடவுளாக பாவித்து வணங்கும் வழக்கம் இங்கிருந்து துவங்கியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது அவர்கள் அரசரையே கடவுளாகத் தான் பார்த்தார்கள் தங்களின் ஆளுமையை நிரூபிக்கவும் பலத்தை அதிகரிக்கவும் வரி வசூல், ஒருங்கிணைந்த அரசாங்கம் என பல விஷயங்களை முன்னெடுத்தார்கள்.

கர்தாஜ் : லெபானானின் இருக்கிற மக்கள் இந்த நகரத்தை கண்டுபிடித்திருந்தார்கள். இது இப்போதைய துனிசியாவில் இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்த நகரம் முக்கியத்துவம் பெறுகிறது. மூன்று போர்களுக்கு பிறகு இதனை ரோமானியர்கள் கைப்பற்றினார்கள். மூன்றாவது புனிக் போரின் போது ரோமானியர்கள் இந்த நகரத்தை முற்றிலுமாக சிதைத்திருந்தார்கள்.

சீனா : கிமு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவின் உருவாக்கமும் அதன் வளர்ச்சியும் துவங்கிவிட்டிருக்கிறது. சீனாவின் முதல் வம்சம் க்சியா. இதன் பிறகு ஷாங்,ஜோஹு ஆகியவை தோன்றியது.

எகிப்து : இன்றளவும் பல வரலாற்று சான்றுகளை புதைந்து வைத்திருக்கும் நாடு தான் எகிப்து. நைல் நதியின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரம் வடக்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் உருவான ஆறு நாகரிகங்களில் இதுவும் ஒன்று. இவர்கள் தான் முறையாக நீர் பாசனம் செய்து பயிர் விளைவிக்க ஆரம்பித்தார்கள். இதனால் நீண்ட நாட்களுக்கு மக்கள் ஒரேயிடத்தில் தங்க ஆரம்பித்தார்கள்.

இத்தாலி : இத்தாலியா என்ற வார்த்தையிலிருந்து இந்த பெயர் வந்திருக்கிறது. ரோம் ஆட்சியாளர்களின் எல்லை என்பதைக் குறிக்கிறதாம் இந்த வார்த்தை. மெடிரேடிரியன் கடல் பகுதியில் தென் ஐரோப்பிற்கு அருகில் உள்ள தீபகற்பத்தில் அமைந்திருக்கிறது. இங்கே போ என்ற மிகப்பெறிய ஆறு ஓடுகிறது. இந்த ஆறு தெற்கிலிருந்து கிழக்கு பக்கமாக ஓடுகிறது. ஆல்ப்ஸ் மலைத்தொடரிலிருந்து அட்ரியாட்டிக் கடலில் இது கலக்கிறது.

மெசபொட்டாமியா : ஆற்றுக்கு இடையில் இருக்கிற நகரம் என்பதை குறிக்கும் விதமாக இதன் பெயர் அமைந்திருக்கிறது. குறைவான இயற்கை வளங்கள் தான். ஆனால் அதனை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். பழங்காலத்தில் எழுத்து முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது மெசபொடாமிய மக்கள் தான்.

போனிசியா : இப்படி ஒரு நாடு கேள்விப்பட்டதில்லையே என்று யோசிக்கிறீர்களா. போனிசியா என்ற பெயர் மறைந்து விட்டிருக்கிறது. இதைத் தான் இன்றைய லெபானான் என்று அழைக்கிறார்கள் சிரியா மற்றும் இஸ்ரேல் இணைந்த பகுதியாக இது இருக்கிறது.

ரோம் : பண்டைய காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பேரரசு ரோம் பேரரசு தான். இவர்கள் பிரித்தானியா, ஸ்பெயின், ஜெர்மனி,இத்தாலி,பிரான்ஸு,எகிப்து உட்பட பல்வேறு நாடுகளையும் தங்கள் கைவசம் வைத்திருந்தார்கள். இதன் வீழ்ச்சிக்கு காரணம் ரோமில் நடைப்பெற்ற உள்நாட்டுப் போர் தான் என்று கூறப்படுகிறது.

சிரியா : சிரியாவின் தலைநகரான டமஸ்கஸ் உலகில் பழமையான நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். பண்டைய காலத்து சிரியா என்பது லெபனான்,இஸ்ரேல்,பாலஸ்தீனம்,சிரியாவின் வடகிழக்கு மாநிலமான ஆல்ஜசீரா உட்பட பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்பட்டது.