பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று(திங்கட்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2018 ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார்.

இவர் ஆட்சிக்கு வந்தால் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என பாகிஸ்தான் மக்கள் நம்பியிருந்தனர்.

எனினும், அந்த நம்பிக்கை வீண்போனது. நாட்டில் விலைவாசி உயர்ந்தும், பணவீக்கம் அதிகரித்தும் வந்தது.

மேலும் வெளிநாடுகளில் பாகிஸ்தான் மீது இருந்த மதிப்பு மேலும் குறைவடைந்தது. இதன்காரணமாக இம்ரான்கான் மீது உள்நாட்டில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவர் இன்றைய தினம் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

1 Shares