இலங்கை

பாண்டிருப்பு கிராமத்தில் புதிய ஜனாதிபதியை வரவேற்ற தமிழ் மக்கள்

இலங்கைத்தீவின் 7 வது நிறைவேற்று சனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவின்   பதவியேற்பு நிகழ்வினையும்  முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டும் கல்முனை நகரின் பிரதான வீதியால் செல்வோருக்கு சாக சாந்திகள் மற்றும் இனிப்பு பண்டங்களை ஐக்கிய தமிழர் முற்போக்கு கூட்டணியின் கல்முனை பிராந்திய அமைப்பாளர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று  கல்முனை  பகுதியில் பாண்டிருப்பு கிராமத்தில்   உள்ள தமிழ் மக்கள்  குறித்த வெற்றியை கொண்டாடும் முகமாக  இனிப்புப்பொருட்கள் வீதியில் சென்றவர்களுக்கு பகிர்ந்து வழங்கியும் பட்டாசு கொளுத்தியும்  கொண்டாடினர்.

இந்நிகழ்வை முற்போக்கு தமிழர்  அமைப்பின் அம்பாறை கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் பொறுப்பாளரும் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவருமாகிய கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தலைமையில்  பொதுஜன பெரமுனவின் கட்சி ஆதரவாளர்கள் பொதுமககள்  இவ்வெற்றி  கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Related posts

வவுனியா கண்டுபிடிப்பாளருக்கு மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு [படங்கள் இணைப்பு ]

main

மலையக மக்களுக்கு ஆப்பு இறுக்கிய புதிய அரசு !

மயூனு

ரஞ்சனின் குரல் பதிவுகள்~ முடிவெடுக்க கூடுகிறது ஐ.தே.க!

மயூனு

Leave a Comment