ஆன்மீகம்

பாற்கடலில் இருந்து வெளிவந்த புனிதமான மரம் இன்றும் இந்தியாவில் இந்த இடத்தில் உள்ளதாம்!

இந்தியா அதன் ஆன்மீக மகத்வத்திற்காக மிகவும் புகழ்பெற்ற நாடாகும். இந்திய மக்களில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். மகாபாரதம், இராமாயணம், பாற்கடல் என அனைத்தின் மீதும் நம்பிக்கையும், பக்தியும் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகஅதிகம்.

பாற்கடல் கடைதல் என்பது இந்து புராணங்களில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த தருணத்தில்தான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார், சிவபெருமான் அண்டத்தை காக்க ஆலகால விஷத்தை குடித்தார், மேலும் அசுரர்கள் சாகாவரம் பெறாமல் தடுக்கப்பட்டனர். ஆனால் பாற்கடலை கடைந்ததில் அமிர்தம் மட்டும் வெளிவரவில்லை. பல புனிதமான திவ்யத்துவம் வாய்ந்த பொருட்களும் வெளிவந்தது. அதில் ஒன்று இன்றும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பாற்கடலில் தோன்றியது
புராணங்களில் கூறியுள்ளபடி பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் மட்டும் வெளிவரவில்லை. ஆலகால விஷம், லக்ஷ்மி தேவி, அப்சரஸ், ஐராவதம், பாரிஜாதம், சாரங்கா, தன்வந்திரி போன்ற பலர் வெளிவந்தனர். இதில் இறுதியாக வெளிவந்தவர்தான் அமிர்த கலசத்தை ஏந்தியதாக கூறப்படுகிறது.

பாரிஜாத விருக்ஷ்ம்
பாற்கடலில் இருந்து வெளிவந்த புனிதமான பொருட்களில் ஒன்று பாரிஜாத மரமாகும். இந்த மரத்தில் பூத்த மலர்கள் வாடாமலும், ஒளிவீசுவதாகவும் இருந்தது. இதனால் இந்திரன் இந்த மரத்தை சொர்க்கத்திற்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆசீர்வதிக்கப்பட்ட மரம்
இந்த மரம் துளையிடமுடியாததாக இருந்தது, அதனை தீண்டுவது வலி, துக்கம், சோர்வு போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கும் என்று கூறப்பட்டது. மேலும் இது அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது.

விஷ்ணு பகவான்
விஷ்ணுவின் வற்புறுத்தலின் பேரில், இந்திரன் மனிதகுலத்தின் நலனுக்காக பாரிஜாத மரத்தை பூமிக்கு அனுப்பி வைத்தார். இந்த புனித மரம் உ.பி.யின் பராபங்கிக்கு அருகிலுள்ள கிந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

தனித்துவமான இலைகள்
இந்த மரத்தில் அதிசயமாகத்தான் பூக்கள் மலரும். இதில் மலரும் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும், காய்ந்தவுடன் மஞ்சள் நிறத்தில் மாறும். இந்த மரம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது மேலும் இது ஒருபாலின மரமாகும். இதன் அர்த்தம் என்னவெனில் இதன் கிளைகளை நட்டு வைப்பதன் மூலம் ஒருபோதும் வளர்க்க முடியாது. மேலும் இது விதைகள் மற்றும் பழங்கள் எதையும் உற்பத்தி செய்யாது. இதன் இலைகள் மனிதர்களின் விரல் நுனி போல இருக்கும்.

பாண்டவர்களின் நாடுகடத்தல்
பாரிஜாத மரத்துடன் மற்றொரு புராணக்கதைக்கு தொடர்புள்ளது, மகாபாரதத்தில் பாண்டவர்கள் தன் தாய் குந்தியுடன் வனத்தில் வசித்தபோது, குந்திக்கு சிவபெருமானை பூஜை செய்வதற்கு எந்த மலர்களும் கிடைக்கவில்லை. இதனால் அர்ஜுனன் தேவேந்திரனை வணங்கி பாரிஜாத மரத்தை அளிக்கும்படி கோரினார். இந்திரனும் தனது புதல்வனின் வேண்டுகோளுக்கிணங்க பாரிஜாத மரத்தை வழங்கினார்.

கல்ப விருக்ஷம்
ஹரிவன்ஷ் புராணத்தில், புனித பரிஜாத மரம் ‘கல்ப விருக்ஷம்’ என்று அழைக்கப்படுகிறது, இது பாற்கடலை கடைந்த பிறகு இந்திரனால் தேவலோகத்தில் வளர்க்கப்பட்டது. கிந்தூரில் இருக்கும் மக்கள் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் இந்த மரத்தில் கயிறைக் கட்டி வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்று நம்புகிறார்கள். இந்திய அரசாங்கம் இந்த மரம் இருக்கும் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய ராசி பலன் 2019.12.24 ~ இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மயூனு

புத்தாண்டில் எடுக்க வேண்டிய வீடு குறித்த சில முக்கிய தீர்மானங்கள்!

மயூனு

உங்க கையில் இந்த ரேகை இருக்கா? அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் காத்திருக்காம்!!

venuja

Leave a Comment