பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட் கிடைக்காததால் ஈ ஓட்டி வரும் பிக்பாஸ் மீண்டும் சண்டக்கோழியான வனிதாவை அழைத்து வந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதா, நாள் தோறும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி நிகழ்ச்சியையும் ரசிகர்களையும் சூடாக்கி வந்தார். வனிதா செய்த அட்டகாசத்தால் அவரை முதலில் வெளியேற்றுங்கள் என கொடி பிடிக்காத குறையாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

பிரபலங்கள் பலரும் வனிதாவின் நடவடிக்கையை விமர்சித்து வந்தனர். ரசிகர்களின் கோரிக்கை பிக்பாஸ் காதில் விழுந்ததோ என்னவோ இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா.

ஆனால் அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்துவிட்டது. சண்டை போட்டாலும் வனிதா அக்கா கெத்துதான், அவரை கூட்டி வாருங்கள் என்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்றைய புரமோவில் வனிதா ஆட்டம் பாட்டம் என ஆரவாரத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக வந்துள்ளார். அவரை சேரன் மாலை அணிவித்து வரவேற்கிறார்.

கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் மொக்கையாக செல்கிறது. அடுத்த வனிதா நான் தான் என்று கூறிய மீரா மிதுன் செய்த காரியம் ஓவர் டோஸாக அப்படியே தூக்கி வெளியே போட்டார் பிக்பாஸ்.

மீராவும் வெளியேறியதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு குறைந்துவிட்டது. இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் என்ன செய்வதென்று தெரியாமல் ஈ ஓட்டினார் பிக்பாஸ்.

சாண்டியையும் கவினையும் பாட்டு ரெடி செய்ய சொல்லி, நேற்றைய எபிசோடில் ஒப்பேத்தினார். இப்படியே போனால் நிகழ்ச்சி படுத்துவிடும் என்று புரிந்து கொண்ட பிக்பாஸ், கன்டென்ட் கிவ்வர், பிராப்ளம் கிரியேட்டர், சண்டக்கோழி என்ற பெயர்களை பெற்ற வனிதா கூட்டி வந்துள்ளார்.

14 Shares