பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த மனு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணத்தினால் நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஏற்கனவே விலகியிருந்தார்.

அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி பணம் ஈட்டும் வரையறுக்கப்பட்ட லேக் ஹவுஸ் அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவரால் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்க முடியாது என தெரிவித்து கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல, பிரதமருக்கு எதிரான மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.