சினிமா

பிரபல பாடகி சுசித்ரா காணாமல் போனாரா?தங்கை முறைப்பாடு – வெளியாகிய அதிர்ச்சி தகவல்

தன்னை பற்றி பொய்யான புகாரை போலீசில் அளித்ததாக தங்கை மீது பிரபல பாடகி சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல பாடகி சுசித்ரா, காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை சுனிதா அடையாறு போலீசில் கடந்த 11-ந்தேதி புகார் அளித்தார். அதில் சுசித்ராவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாரும் கூறி இருந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் சுசித்ராவின் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைவைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது சுசித்ரா அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுசித்ரா நான் காணாமல் போகவில்லை என்று போலீசாரிடம் கூறினார்.

இதுபற்றி பாடகி சுசித்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நான் மாயமானதாக கூறி பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இப்போதும் என்னை ஆஸ்பத்திரியில் வலுக் கட்டாயமாக அனுமதித்துள்ளனர். நான் மாயமாகவில்லை. ஓட்டலில் சென்று ஓய்வு எடுத்தேன் என்று தெரிவித்தார்.

இதுபோன்று புகார் அளிப்பதற்கான காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை என்றும் சுசித்ரா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் புகார் அளித்த சுசித்ராவின் தங்கை சுனிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

Related posts

அறந்தாங்கி நிஷாவின் வாழ்வில் மகிழ்ச்சியான சம்பவம் – குவியும் வாழ்த்துக்கள்

venuja

அன்று நீதிமன்றத்தில் காணப்பட்ட சிறுவன் இப்போ எப்படியிருக்கார்னு பாருங்க – பிக்பாஸ் வனிதாவின் மகனா இது?

venuja

அஜித் தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

venuja

Leave a Comment