பிரைன் லாராவின் சாதனையை முறியடித்து கிறிஸ் கெய்ல் ஆறுதல் அடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது 300-வது போட்டியில் 11 ரன்கள் அடித்து ஏமாற்றம் அடைந்தாலும் இந்த சாதனை அவரை மகிழ்வித்துள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்லுக்கு 300-வது போட்டியாகும்.

300-வது போட்டியில் கிறிஸ் கெய்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார்.

என்றாலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பட்டியலில் பிரைன் லாராவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.லாரா 299 போட்டியில் 10405 ரன்கள் குவித்துள்ளார். கிறிஸ் கெய்ல் போட்டியில் 9 ரன்னைத் தொட்டபோது 10406 ரன்கள் அடித்து சாதனையை முறியடித்தார்.

51 Shares