கோபா அமெரிக்கா கால்பந்து சம்மேளனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் 3அவது இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் சிலி அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி வெற்றிப்பெற்றது. அந்த போட்டிக்கு பின் பேசிய அர்ஜெண்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி, இந்த தொடருக்கான கோப்பை பிரேசில் அணிக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது என்றும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த கருத்தை கூறியதற்காக தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனம் லியோனல் மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட 3 மாதங்களுக்கு தடையும் 50 ஆயிரம் டொலர் அபராதமும் விதித்துள்ளது.

17 Shares