நடிகர் விக்ரமின் படம் என்றால் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் அவரின் நடிப்பில் தற்போது மஹாவீர் கர்ணா படம் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

கர்ணனாக விகரம் நடிக்க முதல் கட்டமாக குருசேத்திர போர் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இதற்காக 1000 துணை நடிகர்கள் இந்த காட்சியில் நடிக்க வைக்கிறார்களாம். இக்காட்சியை எடுக்க 18 நாட்களை ஒதுக்கியுள்ளார்களாம்.

கிளைமாக்ஸில் அரை மணி நேரம் இந்த காட்சி இடம் பெறுமாம். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்கியுள்ள இப்படத்தை மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.

ரூ 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளிவருகிறது.