அன்பு என்றுமே அனாதையில்லை என்பதை சென்னை மக்கள் நிரூபித்து விட்டதாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகென் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து மக்களின் பேராதரவுடன் டைட்டிலை தட்டிச் சென்றவர் மலேசிய பாடகரான முகென். மலேசியாவில் இருந்து வந்த போதும், தமிழக மக்களிடம் இவருக்கு அதிக அன்பு கிடைத்துள்ளது. அதனால் தான் சக போட்டியாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று அவர் டைட்டிலை வென்றுள்ளார்.

முகெனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, அடிக்கடி ‘அன்பு ஒன்று தான் அனாதை’ என முகென் கூறியதுண்டு. ஆனால் அது உண்மையில்லை, அன்பு எப்போதுமே அனாதையில்லை என முகெனுக்கு தமிழக மக்கள் நிரூபித்து விட்டனர். இதனை டிவிட்டர் பக்கத்தில் முகெனும் தெரிவித்துள்ளார்.

பைனல் முடிவடைந்த பின், சமீபத்தில் முகென் சென்னையில் உள்ள பிரபல மாலுக்கு சென்றுள்ளார். அங்கே முகெனை கண்ட ரசிகர்கள், குறிப்பாக பெண் ரசிகைகள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளனர். சென்னை மக்களின் அன்பில் திண்டாடி விட்டார் முகென்.

இதனை ஒரு வீடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முகென். கூடவே, ‘அன்பு எப்போதுமே அனாதை இல்லை. அதை சென்னை மக்கள் நிரூபித்து விட்டனர்’ என அவர் தெரிவித்திருக்கிறார். முகெனின் இந்தப் பதிவு லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

24 மணி நேரத்திற்குள்ளாகவே 3.5 லட்சம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. விரைவில் முகென் லைவ்வில் வந்து கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட்டில் வலியுறுத்தி வருகின்றனர். ரசிகர்களின் ஆசையை முகென் விரைவில் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 Shares