தமிழகம்

பெரிய தப்பு பண்ணிருக்காங்க…ஜாமீன் கொடுக்க முடியாது’ நித்தியானந்தாவின் பெண் சீடர்களுக்கு ஏற்பட்ட கதி!

நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர், நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த புகாரை அடுத்து ஆமதாபாத் ஆசிரம பொறுப்பாளர் பிரன்பிரியா மற்றும் அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிரன்பிரியா மற்றும் அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகியோர் கடந்த 27ஆம் தேதி ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் அவர்கள் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஆமதாபாத் நீதிமன்ற நீதிபதி, இவர்கள் இருவரும் தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் இவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி நிராகரித்தது.

இதனிடையே நித்தியானந்தாவைத் தேடுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வரும் 18-ஆம் தேதிக்குள் நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யப் பெங்களூரு காவல்துறைக்குக் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டுக்குள் கறி விருந்து..! கர்ப்பிணி சடலம்! தகாத உறவு! அதிர வைத்த கொலை!

venuja

3 மாதங்கள் 12 L தாய்ப்பாலை வழங்கி 5 பச்சிளங் குழந்தைகளை காப்பாற்றிய இளம் தாய்! நெகிழ்ச்சி சம்பவம்

venuja

ஒரே மேடையில் 271 திருமணம்~ பின்னணியில் நெஞ்சை உலுக்கும் காரணம்!{படங்கள்}

மயூனு

Leave a Comment